ஊடுருவல்கார்களை அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி

நாட்டில் ஊடுருவல்கார்களுக்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சட்டத்திற்கு புறம்பாக நுழைந்தவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவது உறுதி என்றார்.

Update: 2018-08-13 08:20 GMT
நாட்டில் ஊடுருவல்கார்களுக்கு  அனுமதி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சட்டத்திற்கு புறம்பாக நுழைந்தவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவது உறுதி என்றார். இந்த விஷயத்தில் அரசு சுயமாக முடிவெடுக்கவில்லை என விளக்கியுள்ள அவர்,  நீதிமன்ற உத்தரவின்படியே அரசின் நடவடிக்கை இருப்பதாக விளக்கியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வாக்கு வங்கி அரசியலுக்காக அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டதாகவும் , அவர் குற்றம்சாட்டினார். மக்களுக்கு அளித்த வாக்குறுதி மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தற்போதைய பாஜக அரசு அசாமில் குடிமக்கள் பதிவேட்டை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின மீது நம்பிக்கை இல்லை எனவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்