#Karunanidhi ஹேஷ்​டேக் டுவிட்டரில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-07-28 10:54 GMT
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்த ஹேஷ்​டேக் சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்த டுவிட்டர் ஹேஷ்டேக்கில் பலரும், அவர் உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். இதனால், அது இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிவருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்