திருப்பூர் அருகே 570 கோடி பிடிபட்ட விவகாரம் : "சிபிஐ விசாரணை அறிக்கை வழங்க வேண்டும்" - உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு.

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை வழங்க கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

Update: 2018-06-22 05:35 GMT
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது திருப்பூர் அருகே எந்த ஆவணமும் இன்றி, கண்டெய்னர் லாரிகளில் கட்டுக்கட்டாக 570 கோடி ரூபாய் பிடிபட்டது. இது குறித்து, திமுக எம்.பி. இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. விசாரணையை நிறைவு செய்த சிபிஐ, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், சிபிஐ விசாரணை அறிக்கையின் நகலை வழங்கக் கோரி திமுக சார்பில் நீதிபதி சுப்பையா முன் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை, ஏற்ற நீதிபதி, வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதாகவும், அப்போது இந்த கோரிக்கை குறித்து விசாரிப்பதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்