தூய்மை இந்தியா திட்டம் விருதுகள் - சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது

தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன் பேரூராட்சி இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளன.

Update: 2021-11-20 14:20 GMT
இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் , பேரூராட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற "ஸ்வச் அம்ருத் மகோத்சவ்" விழாவில் பங்கேற்ற  குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்,   தூய்மையான நகரங்கள் குறித்து போட்டி முடிவுகளை வெளியிட்டு  வெற்றி பெற்ற நகரங்களை பாராட்டினார்.  சென்னை மாநகராட்சிக்கு மாநில தலைநகரங்களில் சிறந்த முன்னோடி முயற்சிக்கான  விருது வழங்கப்பட்டது. இதே போல  இந்திய நகரங்களில் வைத்தீஸ்வரன்  பேரூராட்சி  25ஆயிரம் மக்கள் தொகைக்கு  குறைவான நகரங்கள் பிரிவில் தென் இந்தியாவின் சிறந்த தனி  திறன் செயல்பாட்டு நகரம் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழக அரசின் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்