மகளிர் குழுவினரின் வங்கி கணக்கில் பணம் திருட்டு - வங்கி ஊழியர்களே திருடியது அம்பலம்

ஆந்திரா அருகே மகளிர் குழுவினரின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடிய வங்கி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-09-17 07:43 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலிகிரி பகுதியில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அப்பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் கணக்கு வைத்துள்ள நிலையில், வங்கி ஊழியர்கள் மகளிர் குழுவினரின் கணக்குகளில் இருந்து பணத்தை திருடி உள்ளனர். இது தொடர்பாக பிரசன்ன லட்சுமி என்ற பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து வந்த சித்தூர் போலீசார், வங்கி ஊழியர்கள் 11 பேர் உள்பட 16 பேரை கைது செய்து உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்