கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல்: "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - பினராயி விஜயன் எச்சரிக்கை
கேரளாவில் காதலை ஏற்க மறுக்கும் பெண்களைத் தாக்கினாலோ துன்புறுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.;
இது குறித்து பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், வரதட்சணை திருமணங்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளக் கூடாது எனவும், அவர்கள் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பினராயி விஜயன் கூறினார். மேலும், இதுபோன்ற புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்கள் மீதான சைபர் தாக்குதல் வழக்குகளில் தற்போதுள்ள சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.