காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை.. அடித்துக் கொன்ற காதலியின் சகோதரர்கள்

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை.. அடித்துக் கொன்ற காதலியின் சகோதரர்கள்;

Update: 2021-07-25 06:48 GMT
காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை.. அடித்துக் கொன்ற காதலியின் சகோதரர்கள் 

காதல் விவகாரத்தில், அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை, காதலியின் வீட்டு வாசலில் வைத்து எரியூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பீகார் மாநிலம் முஷாபர்பூர் அருகே இளம்ஜோடி காதலித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் சகோதரர்கள் உள்ளிட்டோர், காதலனை அடித்துக் கொலை செய்துள்ளனர். இதனால், இறந்த இளைஞரின் உடல், அவரது காதலியின் ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது வீட்டின் முன் வைத்து எரியூட்டப்பட்டது. இளைஞரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் ஒன்றாக சேர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில், முதன்மை குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்