"ஆபத்தான கட்டத்தில் உலகம்"- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.;

Update: 2021-07-03 13:05 GMT
இந்தியாவில் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவிய கொரோனா வைரஸ் ரகத்திற்கு டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது.இந்த வகை வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அதன் தலைவர் டெட்ரோஸ், டெல்டா வகை, தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
தற்போது, உலகின் 98 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவதால், உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது என்றும் டெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்