தற்சார்பு பாரதத்தின் சாதனை "டிஜிட்டல் இந்தியா" - பிரதமர் மோடி பெருமிதம்

தற்சார்பு பாரதத்தின் சாதனை டிஜிட்டல் இந்தியா என்றும், 5ஜி தொழில்நுட்பத்திற்காக இந்தியா தயாராகி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-07-01 11:20 GMT
தற்சார்பு பாரதத்தின் சாதனை டிஜிட்டல் இந்தியா என்றும், 5ஜி தொழில்நுட்பத்திற்காக இந்தியா தயாராகி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

'டிஜிட்டல் இந்தியா' திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,
டிஜிட்டல் பரிமாற்றம் மூலம் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாகவே,. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் சாத்தியமாகி இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் 
இதன்மூலம் வேறு இடங்களில் புதிய ரேஷன் அட்டை பெற முடியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளிப்பதாக  கூறினார்.
ஆன்லைன் கல்வி முதல் ஆன்லைன் மருத்துவம் வரை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பயன் அளித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, 5ஜி தொழில்நுட்பத்திற்காக இந்தியா தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்