இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் - பூரி கடற்கரையில் 5 டன் மணலில் சிற்பம்

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் - பூரி கடற்கரையில் 5 டன் மணலில் சிற்பம்

Update: 2021-05-31 04:16 GMT
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இரண்டு முகங்களுடன், இரண்டு நுரையீரலை வடிவமைத்து, புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக பரவும் என்பதை உணர்த்தும் வகையில் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் புகைபிடிக்க வேண்டாம் என்றும், இந்த மணல் சிற்பத்தை 5 டன் மணலில் 6 மணி நேரத்தில் உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்