100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம் - இந்திய ரயில்வே தகவல்

100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், 6,260 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2021-05-13 02:21 GMT
100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம் - இந்திய ரயில்வே  தகவல்

100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், 6,260 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.நேற்று ஒரு நாளில் மட்டும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில்கள் மூலம் 800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகம், முதன் முறையாக உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு 120 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. இதுவரை மகாராஷ்டிரத்தில் 406 மெட்ரிக் டன் ஆக்சிஜனும், உத்தரப் பிரதேசத்தில் 1,680 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும் இறக்கப்பட்டுள்ளது, மத்தியப் பிரதேசத்தில் 360 மெட்ரிக் டன், அரியானாவுக்கு 939 மெட்ரிக் டன், ராஜஸ்தானுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும்,  டெல்லிக்கு 2,404 மெட்ரிக் டன், கர்நாடகாவுக்கு 120 மெட்ரிக் டன், தெலங்கானாவுக்கு 123 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண் போய் சேர்க்கப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது
 
Tags:    

மேலும் செய்திகள்