"RAT பரிசோதனை சாவடி அமைக்கலாம்" - இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்

மாநிலங்களுக்கு இடையிலான உள்நாட்டு பயணத்தின் போது ஆரோக்கியமான நபர்களுக்கு RTPCR கொரோனா பரிசோதனை தேவையில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆலோசனை வழங்கியுள்ளது

Update: 2021-05-05 07:45 GMT
 "RAT பரிசோதனை சாவடி அமைக்கலாம்" - இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல் 

மாநிலங்களுக்கு இடையிலான உள்நாட்டு பயணத்தின் போது ஆரோக்கியமான நபர்களுக்கு RTPCR கொரோனா பரிசோதனை தேவையில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆலோசனை வழங்கியுள்ளது.கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அனைவருக்கும் RTPCR பரிசோதனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.அதன்படி ஒருமுறை கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு மீண்டும் RTPCR கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.அதேபோல் கொரோனா தொற்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது மீண்டும் RTPCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் சுமையை குறைக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான உள்நாட்டு பயணத்தின் போது ஆரோக்கியமான நபர்களுக்கு பரிசோதனை எடுப்பதை முற்றிலுமாக தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,பொதுமக்களுக்கு பரிசோதனை வசதியை வழங்கும் வகையில் நகரங்கள் கிராமங்கள் சிறு நகரங்கள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு திறனை கண்டறியும் RAT பரிசோதனை சாவடி அமைக்கலாம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்