காலண்டர், டைரி அச்சுப்பணி நிறுத்தம் : பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் - மத்திய அரசுக்கு அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை

காலண்டர், டைரி உள்ளிட்டவை அச்சிட்டு கைப்பிரதியாக வழங்குவதை இந்த ஆண்டுடன் நிறுத்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பது, சிவகாசி காலண்டர் அச்சகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2020-09-05 06:02 GMT
மத்திய நிதி அமைச்சகத்தின் சிக்கன நடவடிக்கையாக, காலண்டர், டைரி உள்ளிட்டவை அச்சிட்டு கைப்பிரதியாக வழங்குவதை, இந்த ஆண்டுடன் நிறுத்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில், 90 சதவீதத்திற்கு மேல் சிவகாசியில் தான் அச்சு தொழில் நடைபெற்று வருகிறது.  மத்திய அரசின் இந்த திடீர் முடிவு சிவகாசி அச்சகத்தினர் இடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பல லட்சம் அச்சக தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்பதால், மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வெண்டும் எனவும் அவர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்