கர்நாடக அணைகளில் இருந்து 78,000 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 78 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Update: 2020-08-10 07:05 GMT
கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 78 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து  வெளியேறும் நீரின் அளவு நேற்று இரவு 93 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து 77 ஆயிரத்து 950 கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம், 73 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதே போல், கபினி அணையில் இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 25 ஆயிரம் கன அடியாக உள்ளது.  ஐந்தாயிரம் கன அடி நீர், வெளியேற்றப்பட்டு வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்