ஆகஸ்ட் 5-ல் ராமல் கோவிலுக்கு அடிக்கல் : சரயா நதிக்கரையை பலப்படுத்தும் பணி - உத்தரப்பிரதேச கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயா நதிக்கரையை பலப்படுத்தும் பணியை அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்துள்ளார்.;

Update: 2020-07-28 09:02 GMT
அயோத்தியில் வரும் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் களைகட்டி வரும் நிலையில் சரயு நதிக்கரைகளை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 200 முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ள நிலையில் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை உத்தரப்பிரதேச மாநில கூடுதல் தலைமை செயலாளர் டி.வென்டேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை துரிதப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அயோத்தியில் பாதுகாப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்