இதுவரை இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49,310 பேர் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 49 ஆயிரத்து 310 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.;

Update: 2020-07-24 06:29 GMT
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 602 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து 17 ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 740 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 601 ஆக அதிகரிப்பு நேற்று மட்டும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 801 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 1 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்