கொரோனாவை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கை - 4 அமர்வுகள் வெற்றிகரமாக நடந்துள்ளது - எய்ம்ஸ்
கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனை, நாடெங்கிலும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை வழங்கும் "இ-ஐசியு" திட்டத்தை கடந்த 8-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.;
கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனை, நாடெங்கிலும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை வழங்கும் "இ-ஐசியு" திட்டத்தை கடந்த 8-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நாடெங்கும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தமது ஐயங்களை எழுப்பி தெளிவு பெறுகிறார்கள். இதுவரை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 4 அமர்வுகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும், வரும் வாரங்களிலும் இது தொடரும் என்றும் எய்ம்ஸ் அறிவித்துள்ளது.