"மத்திய பல்கலைக் கழகத்துக்கு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பெயர்" - பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்துக்கு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பெயரைச் சூட்ட வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.;

Update: 2020-06-29 02:27 GMT
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்துக்கு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பெயரைச் சூட்ட வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நரசிம்மராவ் பிறந்த நாள், நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை ஓராண்டுக்கு நடத்த உள்ளதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  நரசிம்மராவ் நாட்டின் பிரதமராக, சுதந்திர போராட்ட வீரராக, கல்வி அறிஞராக, எழுத்தாளராக பலவிதங்களில் சேவை ஆற்றி உள்ளதாக நினைவு கூர்ந்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்