நூதன முறையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் - எமதர்மன், கொரோனா வைரஸ் வேடமணிந்த காவலர்கள்
ஒடிஷா மாநிலம் கஜபதி பகுதியில் போலீசார் நூதன முறையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.;
ஒடிஷா மாநிலம் கஜபதி பகுதியில் போலீசார் நூதன முறையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். எமதர்மன், சித்ரகுப்தன் மற்றும் கொரோனா வைரஸ் வேடமணிந்த காவலர்கள் வாகனம் மூலம் பல இடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.