திருப்பதியில் கண்ணாடி குடிநீர் பாட்டில் விற்பனை துவக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக, கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக, கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்த நிலையில், ஓட்டல் மற்றும் கடைகளில் முறைகேடாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றுக்கு தடை விதித்த தேவஸ்தான நிர்வாகம், சோதனை அடிப்படையில் இன்று கண்ணாடி குடிநீர் பாட்டில் விற்பனையை துவங்கியுள்ளது. இதில், திருப்தி ஏற்படும் பட்சத்தில் ஓரு நாட்களில் முறைப்படி அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.