நேரு பல்கலை வளாக மோதல் விவகாரம் : மருத்துவமனையில் இருந்து திரும்பிய மாணவர்கள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மோதல் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.;

Update: 2020-01-06 10:53 GMT
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மோதல் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், தலைமை நீதிபதி ஏ.கே.போப்டேவுக்கு மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 மாணவர்கள் வீடு திரும்பி விட்டதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்