கண்ணாடி ரயில் பெட்டி - சிம்லாவில் அறிமுகம்

நாட்டில் முதல் கண்ணாடி ரயில் பெட்டிகள் ஹிமாச்சல பிரதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.;

Update: 2019-12-26 02:16 GMT
நாட்டில் முதல் கண்ணாடி ரயில் பெட்டிகள் ஹிமாச்சல பிரதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வெளிப்புற அழகை முழுமையாக ரசிக்கும் வகையில், முழுவதும் கண்ணாடிகளால் ரயில் பெட்டி வடிவமைக்கபட்டுள்ளது. பக்கவாட்டில் மட்டுமல்லாமல் மேல்புறமும் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. 7 ரயில் பெட்டிகளுடன் ஹரியானாவின் கல்கா ரயில் நிலையத்தில் இருந்து சிம்லா நகரத்துக்கு கண்ணாடி ரயில் முதல் பயணத்தை தொடங்கியது. யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 96 கிலோமீட்டர்  வழித்தடம், 4 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்