"கொடி நாள் நிதி வழங்க வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடி
பாதுகாப்பு படையின் கொடி நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.;
கொடி நாள் நிதி - பிரதமர் வேண்டுகோள்
பாதுகாப்பு படையின் கொடி நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நாட்டை பாதுகாக்கும் பணியில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் டிசம்பர் 7 ஆம் தேதி இந்த தினம் கடந்த 1949 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் வசூலிக்கப்படும் நிதி, உயிரிழந்த வீரர்கள், அவர் தம் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள், காயமடைந்த உடல் உறுப்புகளை இழந்து வாடும் வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக செலவிடப்படுகிறது. இன்றைய தினத்தில் நாட்டுக்காக பணியாற்றியவர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவதுடன், அதிகமாக கொடி நாள் நிதி வழங்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.