1984 - சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி கலவரம் : மன்மோகன் சிங் கருத்துக்கு நரசிம்மராவ் பேரன் எதிர்ப்பு

நரசிம்மராவ் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து வருத்தமளிப்பதாக, முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பேரனும், ஆந்திர பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான என்.வி. சுபாஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-05 07:45 GMT
நரசிம்மராவ் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து வருத்தமளிப்பதாக, முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பேரனும், ஆந்திர பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான என்.வி. சுபாஷ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங் தெரிவித்த கருத்து ஏற்புடையது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.  அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு உள்துறை அமைச்சராவது தனியாக முடிவெடுக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள சுபாஷ், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது, ராணுவம் அழைக்கப்பட்டு இருந்தால்,  அது பேரழிவாக அமைந்திருக்கும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்