போலி ஆவணங்கள் கொடுத்து துணை ஆட்சியரான நபர் : அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்

கேரளாவில் போலியான ஆவணங்கள் கொடுத்து துணை ஆட்சியரான நபர் குறித்து தகவல் வெளியான நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Update: 2019-11-20 10:13 GMT
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்குட்பட்ட தலச்சேரி துணை ஆட்சியராக செயல்பட்டு வருபவர் ஆசிப் கே. யூசுப். 2016ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற இவர், தன்னுடைய வருமானத்தை மறைத்து போலியான சான்று பெற்று பெற்றுள்ளார். ஆறு இலட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் இருந்தால் கிரிமிலேயர் பிரிவில் வரலாம் என்பதால் வருமான வரி செலுத்துவதை மறைத்து தனது குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் என கூறி போலி சான்று பெற்று சமர்பித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலில் கேரள மாநில தலைமை செயலாளர் உத்தரவின் பேரில் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், துணை ஆட்சியர் ஆசிப் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்