"பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்" - அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.;
பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. 2018-ம் ஆண்டுக்கான நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தெரிவித்துள்ளது.