கல்கி ஆசிரமம் : சோதனையில் கணக்கில் வராத ரூ.500 கோடி கண்டுபிடிப்பு

கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-10-18 13:05 GMT
ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் வரிஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த 3 நாட்களாக வருமானவரிதுறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, ஐதராபாத், பெங்களுரு மற்றும் வரதய்யபாளையத்தில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2014 -15 ஆண்டில் 409 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத பணத்திற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் 43 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் வருமானவரித்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும், 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் நகைகளின் மொத்த மதிப்பு 93 கோடி என்றும், கணக்கில் வராத பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும்   வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஐக்கி அமீரக நாடுகளில் உள்ள இந்நிறுவனங்கள் மூலம் ஆரோக்கிய பயிற்சிக்காக ஏராளமான  வெளிநாட்டு பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் டெல்லி வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்