"ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை காவல்" - டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.;

Update: 2019-10-16 03:48 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிதம்பரத்தை நீதிமன்ற வளாகத்தில் 30 நிமிடங்கள் விசாரிக்க அனுமதி வழங்குவதாக, நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், அமலாக்கத்துறை திகார் சிறையில் விசாரி​க்கப்போவதாக கூறினர். விசாரணை நடத்திய பிறகு தேவைப்பட்டால் அவரை கைது செய்யலாம் என்றும் அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 
Tags:    

மேலும் செய்திகள்