டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தலைநகர் டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த, தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2019-08-13 19:22 GMT
சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தலைநகர் டெல்லியில் கார் குண்டு தாக்குதல் நடத்த,  தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டதன் எதிரொலியாக இந்த தாக்குதலுக்கு,  தீவிரவாதிகள் தீட்டிய சதித்திட்டம் உரையாடல்களை வழிமறித்து கேட்டபோது, தெரிய வந்ததாக ஐ.பி.,மற்றும் ரா உள்ளிட்ட உளவு அமைப்புகளை மேற்கோள் காட்டி, மத்திய அரசு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்து, மத்திய அரசு,  நாட்டின் முக்கிய நுழைவு வாயில்கள், விமான நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தி, தீவிர கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்