அமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2019-06-25 13:42 GMT
புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் ரகுபதி பெற்றுள்ளார். வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் பல லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்களை வாங்கியுள்ளதாகவும் இதனால் நலிவடைந்த அரசு நிறுவனங்கள் மேலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய ரகுபதி, இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோருக்கு மனு அளித்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்