மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கை காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது : ப.சிதம்பரம்
மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை 2009 ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே தொடங்கியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்;
மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை 2009 ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே தொடங்கியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சியில் ஒரு திட்டம் கூட முழுமையாக நிறைவேறவில்லை என்று குற்றம் சாட்டினார். விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு பதிலாக, விவசாயிகளின் தற்கொலைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளதகாவும் சுட்டிக்காட்டினார்.மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைகளின் இறுதி வேலைகளைதான் பாஜக செய்தது, அதன் தொடக்க வேலைகளை செய்தது காங்கிரஸ் கட்சி என்றும் சிதமபரம் குறிப்பிட்டார்.