ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜன்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கடன்சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டது.இதனால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். ஊதியமும் வழங்கப்படாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய ஊழியர்கள், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.