வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம்

வங்கிக் கணக்கு, சிம் கார்டுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2019-03-04 03:03 GMT
வங்கிக் கணக்கு, சிம் கார்டுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாத நிலையில், மக்களவையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்