எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு : சீன நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு

எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க முன்வருமாறு சீன நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2019-01-13 16:13 GMT
இந்தியாவில் 2030 -ஆம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை முழுவதுமாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர இலக்கு வைக்கப்பட்டுள்ளதால், இந்த துறையில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை அழைத்துள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் முதன்மை ஆலோசகர் அனில் ஸ்ரீவாத்சவா கூறியுள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியிலும், பயன்பாட்டிலும்  உலக அளவில் சீனா முன்னணியில் உள்ளதால் இந்தியாவில் தொழில் தொடங்க அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.'
Tags:    

மேலும் செய்திகள்