"முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படத்துக்கு தடை இல்லை" - மத்திய பிரதேச முதலமைச்சர் திட்டவட்டம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய "The Accidental Prime Minister" என்ற புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Update: 2018-12-29 05:06 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய "The Accidental Prime Minister"  என்ற புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிடத்தால் கைப்பாவையாக பயன்படுத்தப்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படத்துக்கு மத்திய பிரதேச அரசு தடை விதித்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் கமல்நாத், எந்தப் படத்துக்கும் தடை விதிக்கவில்லை என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்