விஜய் மல்லையா வழக்கு விசாரணை ஜனவரி 5-க்கு ஒத்திவைப்பு

விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வழக்கை ஜனவரி 5 -ம் தேதிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.;

Update: 2018-12-26 10:00 GMT
விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும்  வழக்கை ஜனவரி 5 -ம் தேதிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த, இந்த வழக்கு, பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். எஸ். ஆஸ்மி, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கினை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்