பாஜக எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் மூவரின் நியமனங்களும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2018-12-06 14:55 GMT
புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் மூவரின் நியமனங்களும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய அரசு நியமனம் செய்த எம்எல்ஏக்கள்  சுவாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவருக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்த போதிலும், பேரவைக்குள் நுழைய சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு, நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர். இதனிடையே, பாஜக எம்எல்ஏக்கள் மூவரும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து, வழக்கில் வெற்றி பெற்றது குறித்து விளக்கி கூறினர்.
Tags:    

மேலும் செய்திகள்