ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பு
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.;
உச்சநீதிமன்ற தீர்ப்பால் எழுந்த கலவரத்தை அடுத்து அமல்படுத்திய 144 தடை உத்தரவு, மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16 ஆம் தேதி அன்று திறக்கப்பட்டும் இன்னும் தடை தொடர்கிறது.
பக்தர்கள் தற்போது நிலக்கல் பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து அரசு பேருந்து மூலம் பம்பைக்கு சென்று சபரிமலைக்கு செல்கின்றனர். போலீசார் பக்தர்களுக்கு பல கட்டுபட்டுகள் விதித்துள்ளதால் கடந்த நாட்களில் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில் நடைதிறக்கப்பட்டு 18 நாட்களான நிலையில் நேற்று மாலை வரை 67 ஆயிரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பம்பையை கடந்து சபரிமலைக்கு சென்றுள்ளனர். இது மேலும் அதிகரித்து 90 ஆயிரம் வரையான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.