தீபாவளி பண்டிகை : மின்னணு, மின்சாதன பொருள் விற்பனை அதிகரிப்பு

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நடப்பாண்டு மின்னணு மற்றும் மின்சாதன பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.;

Update: 2018-11-12 07:11 GMT
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நடப்பாண்டு மின்னணு மற்றும் மின்சாதன பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இதன் விற்பனை 12 முதல் 15 சதவீதம் அதிகரித்து இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மின்னணு மற்றும் மின்சாதன பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கிரைண்டர், மொபைல் உள்ளிட்ட பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 10 சதவீதமாக கடந்த ஜூலை மாதம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவும், வங்கிகளின் சுலபமான மாத தவணை வசதி, கடன் வழங்குதல் உள்ளிட்ட காரணங்களால் விற்பனை அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்