சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்

சித்திரை ஆட்டம் பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

Update: 2018-11-05 12:50 GMT
சித்திரை ஆட்டம் பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. பம்பை வழியாக செல்லும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள், 18 ம் படி ஏறி சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். 


பாதுகாப்பு பணியில் பெண் போலீசார்:



ஒருநாள் மட்டுமே நடை திறந்திருக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். பெண்கள் வரக்கூடும் என்பதால் சபரிமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்முறையாக பெண் போலீசார் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர் களை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளனர். சபரிமலை கோயிலில் பூஜை முடிந்து நாளை இரவு, நடை சாத்தப்படுகிறது. மண்டல பூஜை மற்றும் மகரஜோதிக்காக பின்னர் சபரிமலை நடை திறக்கப்படும். 
Tags:    

மேலும் செய்திகள்