பிரதமர் பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார், ராஜபக்சே

இலங்கையின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சே தனது பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார்.

Update: 2018-10-29 10:03 GMT
இலங்கையின் 22-வது பிரதமராக, கடந்த 26-ஆம் தேதியன்று ராஜபக்சே பதவி ஏற்றார். அதிபர் மைத்ரிபால சிறிசேன அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, இன்று காலை பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற ராஜபக்சே, தனது பொறுப்புகளை கவனிக்க தொடங்கியுள்ளதாக, பிரதமரின் தனி செயலாளர் அதரசேகர தெரிவித்துள்ளார். இதனிடையே, தனது தலைமையிலான இடைக்கால அரசுக்கு, ஆதரவு தருமாறு, அனைத்து கட்சிகளுக்கும், ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார். 

அதன்படி, நேற்று ராஜபக்சேவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 3 பேர், தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடிவேல் சுரேஷ், அரவிந்த குமார் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்