வீடியோ வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள் : மனநல மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

Netflix போன்ற வீடியோ வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-10-08 07:51 GMT
* செல்போன், கம்ப்யூட்டர் போன்றவற்றின் பயன்பாட்டால், மனிதனுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து சரி செய்வதற்காக, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆய்வு நிறுவனம் சார்பில், பெங்களூருவில் shut எனப்படும் பிரத்யேக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

இந்த மருத்துவமனையில், NETFLiX எனப்படும் வீடியோ வலைதளத்திற்கு அடிமையானதாக ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 26 வயதாகும் அந்த இளைஞர், தொடர்ந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக, netflix-ல் வீடியோக்களை பார்க்கிறார். இதனால் கடந்த ஆறு மாதங்களாக அவர், உலகத்தோடு ஒன்றாமல், தனிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார். 

* வேலைக்கு போகாமல், வீடியோ பார்ப்பதை மட்டுமே வேலையாக வைத்துள்ள அவரை, பெற்றோர் பலமுறை எச்சரித்தும், அதனை கண்டுகொள்ளாமல் netflix-லேயே மூழ்கியுள்ளார். அவரை யதார்த்த நிலைக்கு கொண்டு வர மருத்துவர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர்.

* இதேபோன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலர், netflix போன்ற வலைதளங்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீடியோ கேம்களை தொடர்ந்து தற்போது, இது போன்ற வலைதளங்களிலும், மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுவதால், அவர்களின் கல்வியும், மனநிலையும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கும் மருத்துவர்கள், பிள்ளைகளை பெற்றோர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்