ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஏர் இந்தியா விமான பயணம் : மத்திய அரசு, ரூ.1,146 கோடி கட்டணம் பாக்கி

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ததற்கான கட்டண பாக்கியாக ஆயிரத்து 146 கோடி ரூபாயை , மத்திய அரசு செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது.

Update: 2018-10-01 04:44 GMT
* முன்னாள் ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ஏர் இந்தியா பதிலளித்துள்ளது. குடியரசுத் தலைவர்,  குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள். 

* இந்த வகையான பயணத்துக்கு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு கட்டண பாக்கியாக ஆயிரத்து 146 கோடி ரூபாய் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், பாதுகாப்பு அமைச்சகம் 211 கோடியே 17 லட்சமும், மத்திய அமைச்சரவை  செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியன 543 கோடியே 18  லட்சமும், வெளியுறவுத்துறை அமைச்சகம் 392 கோடியே 33 லட்சமும் பாக்கி வைத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்