அயோத்தி வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.;

Update: 2018-09-27 14:55 GMT
அயோத்தி வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தீர்ப்பு அளித்தனர்.  மசூதிக்கு சென்று தொழுகை செய்தல் இஸ்லாமின் ஒருங்கிணைந்த முறையா என்பதை பெரிய அளவில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். என்வே, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்று தங்கள் தீர்ப்பில், நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்