5 மாநில தேர்தல் : பாஜக புதிய வியூகம்
பதிவு: செப்டம்பர் 09, 2018, 12:27 AM
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், புதுடெல்லியில் 2 நாள் பாஜக தேசிய செயற்குழு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா , பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்,  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் , மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் குறித்தும், பிரசார யுக்தி, கூட்டணி அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனிடையே, வருகிற 15 ம் தேதி தேர்தல் பிரசாரத்தை அமித்ஷா, தெலங்கானாவில் இருந்து துவங்குவார் 
என பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.