சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம் : போலீஸ் பாதுகாப்பில் இருந்த பெண்ணை கடத்திய உறவினர்கள்..!

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த பெண் ஒருவரை சினிமா பாணியில் அவரது உறவினர்கள் கடத்திச் சென்றனர்.

Update: 2018-09-05 04:12 GMT
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண், தனது கணவருடன், முசாஃபர்நகர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக அந்தப் பெண்ணை, போலீசார் முசாஃபர்நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இதையறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், போலீஸ் பாதுகாப்பையும் மீறி உள்ளே புகுந்து அவரை கடத்திச் சென்றனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஷெர்பூர் என்ற கிராமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை போலீசை மீட்டனர்.உறவினர்கள், அந்தப் பெண்ணை கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்