பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வழக்கு : வெளிவரும் புதிய ஆதாரங்கள்

பிரதமர் மோடிக்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக மகாராஷ்ட்டிர காவல்துறை தெரிவித்துள்ளது.

Update: 2018-09-01 05:51 GMT
மாவோயிஸ்ட் சிந்தனையாளர்கள் என கருதப்படும் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளர் வழக்கறிஞரான சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 5 சமூக ஆர்வலர்களுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக மகாராஷ்ட்டிர காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய, சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை ஏ.டி.ஜி.பி. பாரம் பீர் சிங் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கும், மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்புள்ளது என்பதை தெளிவாக காட்டுவதாக கூறியுள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாகவும், இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்