அமிர்தானந்த மடம் சார்பில் கேரளாவிற்கு ரூ.10 கோடி நிதியுதவி
பதிவு: ஆகஸ்ட் 30, 2018, 10:54 AM
அமிர்தானந்த மடம் சார்பில் கேரளாவிற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. முகநூல் மூலம் ஒன்றிணைந்த அமெரிக்க வாழ் மலையாளிகள், சுமார் 9 கோடியே 88 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிதியை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேற்று வழங்கினர். இதேபோல், நடிகர் நிவின்பாலி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு,  25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.