வெள்ளத்தால் சிதிலமடைந்த கேரளா : மெல்ல மீண்டு வரும் மக்கள்...

கேரளாவில் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாத சோகத்தில் உள்ளனர்.

Update: 2018-08-26 09:33 GMT
100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கேரளாவை புரட்டிப்போட்டுள்ளது வெள்ள பாதிப்பு. அதன் சுவடுகள் இன்னும் அங்கு மாறாத நிலையில் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. தேவிகுளம், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூணாறு பகுதியில் ஒரு இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் 4 வீடுகள் தரைமட்டமாகின. அதில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல தேவிகுளம் பகுதியில் இரு இடங்களில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் ஒரு பாதிரியார் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் தங்களது குடும்பத்தினரையும், உறவுகளையும் இழந்தவர்கள் கண்ணீர் வடித்தபடி உள்ளனர். இயற்கை பேரழிவால் சிக்கிய தேவிகுளம், மூணாறு பகுதிகள் அதிலிருந்து மீள்வதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும் என்பதே நிதர்சனம்.
Tags:    

மேலும் செய்திகள்