ரூ.700 கோடியை நிராகரித்தது மத்திய அரசு

வெள்ள நிவாரண பணிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்த 700 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

Update: 2018-08-22 11:03 GMT
கேரள வெள்ள பாதிப்புகளுக்காக 700 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக, அரேபிய இளவரசர் சேக் முகமது பின் சையது அறிவித்துள்ளார்.இதுபோல,கத்தார் அரசு 35 கோடி ரூபாயையும், மாலத்தீவு அரசு 35 லட்ச ரூபாயையும் நிவாரண தொகையாக அறிவித்துள்ளன.இந்நிலையில், 700 கோடி ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நிதி உதவிகளை மத்திய அரசு மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற இயற்கை பேரிடர்களின்போது, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதில்லை என 2005ம் ஆண்டில் இருந்து,  மத்திய அரசு கொள்கை முடிவு இருப்பதாகவும்அதன் தொடர்ச்சியாகவே, ஐக்கிய அரபு எமிரேட்சின் 700 கோடி நிதியை தற்போது நிராகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.2004ம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது, 2005 ஜனவரியில் அமெரிக்கா நிதியுதவி அளிக்க முன் வந்தபோது,பேரிடர்களை எதிர்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளதாக கூறி,  அந்த உதவியை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்தார்.அமெரிக்க நிதி உதவியை மன்மோகன் சிங் நிராகரித்ததை முன்வைத்து, தற்போது 700 கோடியை மத்திய அரசு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும், மத்திய அரசை நேரடியாக தொடர்பு கொண்டு நிதி உதவி வழங்குவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் கேரள அரசிடம் தான் தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்